குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் உடல்நலக்குறைவால் காலமானார்


குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் உடல்நலக்குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 16 Dec 2023 6:01 PM IST (Updated: 16 Dec 2023 6:32 PM IST)
t-max-icont-min-icon

கடந்த மாதம் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குவைத்,

குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபா, தனது 86வது வயதில் காலமானார். இந்த தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் குவைத் அரசு தெரிவித்துள்ளது. அதில், குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

தனது சகோதரர் மறைவுக்கு பின் 2020-ல் மன்னராக பொறுப்பேற்ற அவர், மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கடந்த மாதம் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் முன்னேறியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமானார்.


Next Story