இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
x

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க போட்டியிடுகின்றனர்.

கொழும்பு,

கொழும்பு, இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார். புதிய அதிபர் தேர்தல் 20-ந் தேதி (இன்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்முனை போட்டி நிலவியுள்ளதால் யார் புதிய அதிபராக வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிடுகின்றனர்.


Next Story