தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே


தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
x

இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் கடந்த 18-ந்தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை சென்றடைந்தது. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ. 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தது.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.' என்ற தெரிவித்துள்ளார்.



Next Story