11 வயது மாணவனுடன் தகாத உறவு - திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கைதான ஆசிரியை


11 வயது மாணவனுடன் தகாத உறவு - திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கைதான ஆசிரியை
x

Image Courtesy : @scarlett4kids

மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ரிவர் கிரெஸ்ட் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த மேடிசன் பெர்க்மேன்(வயது 24), அதே பள்ளியில் பயிலும் 11 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் போலீசார் அவரை கைது செய்துள்ளனார். கைதான ஆசிரியை மேடிசன் பெர்க்மேனுக்கு இன்னும் 3 மாதங்களில் அவரது காதலருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தன்னிடம் பயிலும் மாணவருடன் மேடிசன் தினமும் போனில் பேசி வந்துள்ளார். இதனை அந்த மாணவரின் பெற்றோர் கவனித்து, மாணவரின் பொபைல் போனை சோதித்தபோது, இருவரும் ஆபாசமான குறுஞ்செய்திகளை பகிர்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியை மேடிசன் பெர்க்மேனை கைது செய்தனர். மேலும் மேடிசனின் கைப்பையில், அவருக்கும் மாணவருக்கும் இடையிலான தகாத உறவை விவரிக்கும் வகையில் கைப்பட எழுதிய குறிப்புகள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி வகுப்பறையில் உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களில் மாணவரிடம் ஆசிரியை மேடிசன் பெர்க்மேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 வயது மாணவரின் பெற்றோர், கடந்த டிசம்பர் மாதம் ஆப்டன் ஆல்ப்ஸ் சுற்றுலா தளத்திற்கு சென்றபோது ஆசிரியை மேடிசன் பெர்க்மேனையும் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் மாணவரின் போன் நம்பர் தனக்கு கிடைத்ததாக போலீசாரிடம் மேடிசன் கூறியுள்ளார். அதே மாதத்தில்தான் மேடிசனுக்கு அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை கிம்பர்லி ஆஸ்டர்ஹியூஸ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஆசிரியை மேடிசன் பெர்க்மேனுக்கு 25 ஆயிரம் டாலர் பிணைத் தொகையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் அவர் பள்ளி வளாகத்தில் நுழையவோ, பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ கூடாது எனவும் உத்தரவிட்டு, வழக்கை வரும் 30-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Next Story