பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
நடப்பாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story