சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறைபிடித்த பயங்கரவாதிகள்; அதிரடியாக மீட்ட பாதுகாப்புப்படையினர்


சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறைபிடித்த பயங்கரவாதிகள்; அதிரடியாக மீட்ட பாதுகாப்புப்படையினர்
x

பயங்கரவாதிகள் சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறை பிடித்த நிலையில் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக மீட்டனர்.

மாஸ்கோ,

ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ் மாகாணத்தில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள், குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பலர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் பணியில் இருந்த ஊழியர்களை பயங்கரவாத வழக்கில் சிறையில் உள்ள கைதிகள் இன்று சிறைபிடித்தனர். சிறை அறைகளை உடைத்துக்கொண்டு வளாகத்திற்குள் வந்த பயங்கரவாதிகள் மற்றும் பிற கைதிகள் சிறைத்துறை ஊழியர்களை பணய கைதிகளாக சிறைபிடித்தனர். 2 ஊழியர்களை சிறைபிடித்த பயங்கரவாதிகள் சிறையில் இருந்து வெளியேற ஏற்பாடு செய்தால் மட்டுமே பணய கைதிகளை விடுவிப்போம் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து, சிறை அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்புப்படையினர் விரைந்தனர். மேலும், சிறைக்குள் அதிரடியாக நுழைந்த பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பணய கைதிகளை மீட்டனர். சிறை ஊழியர்களை 6 பயங்கரவாதிகள் சிறைபிடித்ததாக தகவல் வெளியான நிலையில் பயங்கரவாதிகள் சிலரை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது. பின்னர், பணய கைதிகளாக இருந்த சிறைத்துறை ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Next Story