பிலிப்பைன்சில் அரிசி விலை உயர்வு - மக்கள் போராட்டம்
பிலிப்பைன்சில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது.
மணிலா,
பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த டிசம்பருடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் உயர்ந்து 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனால் அரிசி விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு அரசின் கையிருப்பில் உள்ள அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்ததே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே அரிசி விலையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
எனவே வேளாண் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்தநிலையில் அரிசி விற்பனை ஊழல் தொடர்பாக தேசிய உணவு ஆணையத்தின் தலைவர், அதிகாரிகள் உள்பட 138 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வேளாண்துறை மந்திரி பிரான்சிஸ்கோ டியு லாரல் கூறினார்.
Related Tags :
Next Story