சந்திரிகாவை கொல்ல முயன்ற வழக்கில் இருந்து தமிழர்கள் 8 பேர் விடுதலை ரணில் விக்கிரமசிங்கே பொதுமன்னிப்பு வழங்கினார்.
இலங்கை அதிபராக கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை சந்திரிகா குமாரதுங்கா இருந்தார்.
கொழும்பு,
இலங்கை அதிபராக கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை சந்திரிகா குமாரதுங்கா இருந்தார். அப்போது அவரை கொலை செய்ய முயற்சித்ததாக விடுதலைப்புலிகள் படையைச் சேர்ந்த 8 தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவர்களில் 3 பேருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு தலா 5 ஆண்டு முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் தலா 22 ஆண்டுகளும், மற்றவர்கள் தலா 11 ஆண்டுகளுக்கு மேலும் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டனர். இதனால் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ் அமைப்புகளும், தமிழ் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, தமிழர்கள் 8 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.