பிரதமர் மோடி வருகை; வெள்ளை மாளிகையில் உயர பறக்கும் மூவர்ண கொடி


பிரதமர் மோடி வருகை; வெள்ளை மாளிகையில் உயர பறக்கும் மூவர்ண கொடி
x

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மூவர்ண கொடி உயர பறக்க விடப்பட்டு உள்ளது.

வாஷிங்டன் டி.சி.,

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர், வரும் ஜூன் 21-ந்தேதி வரவேற்கின்றனர்.

அவரது வருகையை முன்னிட்டு வாஷிங்டன் டி.சி.யில் இந்தியாவின் மூவர்ண கொடி உயர பறக்க விடப்பட்டு உள்ளது. இதுபற்றி நியூஜெர்சியில் வசித்து வரும் இந்திய நாட்டவரான ஜெசல் நார் கூறும்போது, மூவர்ண கொடியை பார்ப்பது உண்மையில் கவுரவம் மற்றும் பெருமை அளிக்கும் விசயம்.

பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை அடுத்து வெள்ளை மாளிகை முன் மூவர்ண கொடியை பார்க்கும்போது, புதிய தலைமுறைக்கான வரவாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நவீன தொழில் நுட்பங்கள் அதிக அளவில் வருவதற்கான ஒரு பெரிய கவுரவம் ஆகவும் இது இருக்கும் என கூறியுள்ளார்.

இவர் அமெரிக்கா முழுவதும் பணி நோக்கத்திற்காக மூவர்ண கொடியை ஏந்தி சுற்றி வருகிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் இந்திய சமூக மக்கள் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்ள கூடிய கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரை வரவேற்க அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூக மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Next Story