பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு - சிறப்பு விருந்தில் பங்கேற்பு


பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு - சிறப்பு விருந்தில் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 July 2023 4:41 AM IST (Updated: 15 July 2023 3:44 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். இதற்கிடையே, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.


Next Story