ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளித்து உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்: ரஷிய ஊடகங்கள் தகவல்!


ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளித்து உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்: ரஷிய ஊடகங்கள் தகவல்!
x

அமெரிக்க பாதுகாப்புத் துறை முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக ரஷிய நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க பாதுகாப்புத் துறை(பென்டகன்) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக ரஷிய நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளபடி, கலிபோர்னியாவில் முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை போலந்து வழியாக பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டு உள்ளது.

இதில் முன்னாள் விமானிகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றிய பிற ஆப்கானியர்கள் உள்ளனர். இந்த நடவடிக்கைகள் உக்ரைனில் ரஷியாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் விளைவுகளை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அத்தகைய நடவடிக்கை குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின், ஆப்கானிஸ்தானின் அனுபவம் வாய்ந்த இராணுவ மற்றும் விமானப்படை ஊழியர்கள் பலர் தங்கள் நாட்டை விட்டு தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றனர்.

ஆப்கானிஸ்தான் இராணுவ மற்றும் விமானப்படை ஊழியர்கள் பலர், ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் சில அதிநவீன உபகரணங்களை தலிபான்களின் கைகளில் சிக்காமல் வைத்திருக்கும் முயற்சியில் நாட்டை விட்டு வெளியேறினர்.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து முந்தைய அரசாங்கத்தில் பணியாற்றிய 100 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் குடும்பம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறினர். ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையை சேர்ந்த சிலர் சரணடைந்த பிறகு, பலரை தலிபான்கள் தூக்கிலிட்டனர் என்று ஐ.நா அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள ஆப்கான் வீரர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்க முயற்சிக்கிறது என்று ரஷியா தெரிவித்துள்ளது.


Next Story