ஹைப்பர் சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த அமெரிக்கா


ஹைப்பர் சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த அமெரிக்கா
x

ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அமெரிக்க ராணுவம் மீண்டும் சோதனை செய்துள்ளது.

வாஷிங்டன்,

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

மேலும் ராணுவம்-கப்பற்படை கூட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஹைப்பர்சோனிக் ஆயுத ஆராய்ச்சிக்கான தரவுகளைச் சோதிக்கவும் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 11 வெவ்வேறு சோதனைகளை ராக்கெட் கொண்டு சென்றதாகவும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைப்பர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும். முதல் சோதனை அக்டோபர் 2021 இல் நடத்தப்பட்டது.


Next Story