'சந்திரயான்-3' வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகின் வேறு எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலத்தை தரையிறக்கி இந்தியா சரித்திர சாதனையை படைத்துள்ளது. இதற்காக உலக நாடுகள் பலவும் இந்தியாவை பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்தியா இதுபோன்று வெற்றி பெறும் தருணங்களில் வழக்கமாக அமைதி காக்கும் பாகிஸ்தான் இந்த முறை இந்தியாவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்தியாவின் 'சந்திரயான்-3' வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் "இது ஒரு மகத்தான அறிவியல் சாதனை. இதனை சாதித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்கு உரியவர்கள்" எனத் தெரிவித்தார்.
Related Tags :
Next Story