ரஷியா - உக்ரைன் போர்: அணு ஆயுதங்களை இருதரப்பும் பயன்படுத்த கூடாது - இந்தியா வலியுறுத்தல்


ரஷியா - உக்ரைன் போர்: அணு ஆயுதங்களை இருதரப்பும் பயன்படுத்த கூடாது - இந்தியா வலியுறுத்தல்
x

அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது.

புதுடெல்லி,

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷியா நடத்தி வருகிறது.

உக்ரைனில் போர் தீவிரம் அடைவதால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் - இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைனின் அணு மின் நிலையங்களில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி 'நாசகார' ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்து வருவதாக ரஷியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இதை மறுத்துள்ள உக்ரைன் அணுசக்தி அமைப்பு ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில்தான் ஆபத்தான அணுக் கழிவுகளைக் கொண்டு ரஷியா ஆயுதங்களை தயாரிப்பதாக அந்த அமைப்பு எதிா்க்குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

ரஷிய பாதுகாப்புத் துறை மந்திரி சொ்கேய் ஷாய்கு, தங்கள் மீது நாசகார ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருவதாக குற்றம் சாட்டினாா்.

அணுக்கதிா் வீச்சுப் பொருள்களால் ஆன அந்த ஆயுதங்கள் மூலம் உக்ரைன் போரை மிகப் பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரஷிய பாதுகாப்புத் துறை மந்திரி செர்ஜி சோகுவுடன் மந்திரி ராஜ்நாத் சிங்

நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரு மந்திரிகளும் விவாதித்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரம் பேச்சுவார்த்தை மற்றும் அரசாங்க ரீதியில் தீர்க்கப்பட வேண்டும். அணு அல்லது கதிரியக்க ஆயுதங்கள் மனிதகுலத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. ஆகவே அணுஆயுதங்களை இருதரப்பும் பயன்படுத்தக்கூடாது பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story