கொரிய தீபகற்ப பதற்றத்துக்கு மத்தியில் கிம் ஜாங் அன்னை சந்திக்கிறார் ஜப்பான் பிரதமர்
ஜப்பானும், தென்கொரியாவும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
டோக்கியோ,
கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி ஜப்பானும், தென்கொரியாவும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இந்த பயிற்சியை நிறுத்தும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் அந்த நாடுகள் அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இந்த பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தனது விருப்பத்தை தெரிவித்து வந்தார். அதன்படி அவர்கள் இருவரும் கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக வடகொரியா தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங் நேற்று கூறினார். அப்போது ஜப்பானில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வடகொரியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.