புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்திய வடகொரியா
வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது.
பியாங்யாங்,
அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா பல்வேறு ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதன்படி வடகொரியாவில் உள்ள மேற்கு கடல் பகுதியில், 'ஹவாசால்-1 ரா-3' என்ற சக்திவாய்ந்த ஏவுகணையையும், விமானத்தை தாக்கி அழிக்கும் 'பியோல்ஜி-1-2' என்ற ஏவுகணையையும் நேற்றைய தினம் வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப போர்க்கருவிகளில் தொழில்நுட்பங்களை புகுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த இரு சோதனைகளும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story