சிறையில் உள்ள பெண் உரிமைகள் ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!


சிறையில் உள்ள பெண் உரிமைகள் ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
x
தினத்தந்தி 6 Oct 2023 2:56 PM IST (Updated: 6 Oct 2023 5:50 PM IST)
t-max-icont-min-icon

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் உரிமைகள் ஆர்வலருக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம்,

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான அவரது போராட்டத்திற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு நடந்த வன்முறைப் போராட்டங்களில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் நர்கீஸ் முகமதி கலந்துகொண்டபின், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.


Next Story