மிக அதிக வேகத்தில் நெருங்கும் சிறுகோள்: பூமிக்கு ஆபத்தா?


மிக அதிக வேகத்தில் நெருங்கும் சிறுகோள்:  பூமிக்கு ஆபத்தா?
x

விண்வெளியில் சிறுதும் பெரிதுமாக எண்ணில் அடங்காத பாறைகள் சுற்றி வருகின்றன.

வாஷிங்டன்,

விண்வெளி குறித்து அமெரிக்காவின் நாசா தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்யத் தனியாக ஒரு துறையை நாசா வைத்துள்ளது.

அவை முக்கியமாக சிறுகோள் குறித்து முக்கியமாக ஆய்வு செய்வார்கள். விண்வெளியில் சிறிதும் பெரிதுமாக எண்ணில் அடங்காத பாறைகள் சுற்றி வருகின்றன. இதையே அவர்கள் சிறுகோள் எனக் குறிப்பிடுகிறார்கள்.

இந்தநிலையில், 620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த (ஜேவி33) என்ற இந்த சிறுகோள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் பயணித்து வரும் இந்த சிறுகோள், நிலவை விட 3 மடங்கு தொலைவில் இருந்தாலும் ஒப்பிட்டளவில் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரவுள்ளது. இந்த சிறுகோளை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது.


Next Story