பாகிஸ்தான்: பலூசிஸ்தான் நகரில் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் குறைந்தது 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குட்டா நகரில் ஷப்சல் என்ற பரபரப்பான சாலை உள்ளது. இந்த பகுதியில் இன்று மாலை வழக்கம்போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதில், 3 பேர் பெண்கள் ஆகும். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், படுகாயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் குறைந்தது 5 பேர் பலியாகி உள்ளதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ககான் பகுதியில் துப்புரவு நடவடிக்கையின் போது வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இடை-சேவை மக்கள் தொடர்பு (ISPR) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான்களின் கிளை பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.