அமெரிக்காவில் பயங்கரம்! பிறந்து 18 மாதங்களே ஆன பிஞ்சு குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்த கொடூர தாய்!
லூசியானா மாநிலத்தில் ஒரு பெண் தனது 18 மாத கைக்குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் 'பேயோ டெர்ரெபோன்' ஆற்றின் மேலே உள்ள பாலத்தில் இருந்து, ஒரு பெண் தன் கைக்குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லூசியானா மாநிலத்தில் 'பேயோ டெர்ரெபோன்' ஆற்றின் மேலே உள்ள பாலத்தில் இருந்து, ஒரு தாய் தனது 18 மாத கைக்குழந்தையை தூக்கி எறிந்தார்.
இந்த கொடூர சம்பவம் செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை அன்று மாலை சுமார் 4:50 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து லூசியானா போலீசுக்கு சற்று நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆஷா ராண்டால்ப் என்ற அந்த பெண்ணை கைது செய்து கொலை குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஆஷா ராண்டால்ப்(30) என்ற பெண்மணி தன்னுடைய குழந்தையை எவ்வித காரணமுமின்றி வேண்டுமென்றே ஆற்றில் தூக்கி எறிந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளார்.
அதன்பின் அந்த குழந்தையை அவர் ஆற்றிலிருந்து மீட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற போது ஆஷா தனது 8 வயது மற்றும் 6 வயது குழந்தைகள் இருவரையும் தனது வாகனத்தில் விட்டுச் சென்றுள்ளார். இந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஏதுவாக போலீசுக்கு அளித்தால், அவர்களுக்கு 1,000 டாலர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் மட்டும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக 2,096 குற்றச்சாட்டுகள் பதிவாகி விசாரணைகள் நடத்தப்பட்டன என்ற அதிர்ச்சி தகவலை லூசியானா குழந்தைகள் மற்றும் குடும்ப சேவைகள் துறை வெளியிட்டுள்ளது.மேலும் இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.