சிரியாவில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்


சிரியாவில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
x

சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

டமாஸ்கஸ்,

சிரியாவின் மத்திய நகரமான ஹமாவில் இருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆகவும், 3.9 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக சிரிய தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் பல மாகாணங்களில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் ஏற்பட்டது. முன்னதாக இந்த நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story