இந்தோனேசியாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

மாயமான பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் அங்கு வெள்ளத்தில் மூழ்கின.
மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி அங்கு 10 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story