பிரான்சில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மரணம்
முன்னாள் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜாக் டெலோர்ஸ், தனது 98 வயதில் காலமானார்.
பாரீஸ்,
ஐரோப்பிய கவுன்சில் தலைவராக 1985 முதல் 1995 வரை இருந்தவர் ஜாக் டெலோர்ஸ் (வயது 98). ஐரோப்பிய நாணயமான யூரோவை அறிமுகம் செய்தது, ஐரோப்பிய ஒற்றை சந்தையை உருவாக்குதல் போன்றவற்றில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
அரசியல்வாதியான இவர் பிரான்சின் நிதி மந்திரியாகவும் பணியாற்றினார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜாக் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பொதுச் சந்தையை உருவாக்குதல், பயணத்திற்கான ஷெங்கன் ஒப்பந்தங்கள், மாணவர் பரிமாற்றத்திற்கான ஈராஸ்மஸ் திட்டம் மற்றும் குழுவின் ஒற்றை நாணயமான யூரோவை உருவாக்குதல் ஆகியவை ஜாக் டெலோர்ஸ் மேற்பார்வையிட்ட திட்டங்களில் அடங்கும்.