இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது
போரில் சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா,
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1-ந்தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து காசாவை இஸ்ரேல் மீண்டும் முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. தெற்கு காசாவை பிரதான இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 11 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.