இந்தோனேஷியாவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
இந்தோனேஷியாவில் குரங்கு அம்மையால் ஒருவா் முதல் முறையாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜகார்த்தா,
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு இந்தோனேஷியாவுக்கு திரும்பிய 27 வயது நபருக்கு, கடந்த 5 நாள்களாக குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன. அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், அந்நபருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கடந்த மே மாதம் இங்கிலாந்தில் இருந்து குரங்கு அம்மை நோய்ப் பரவல் கண்டறியப்பட்டது. ஜூலையில் குரங்கு அம்மையை சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடா்ந்து, நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தப்பட்டன.
இதுவரை 90 நாடுகளில், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story