இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் - அமெரிக்கா பாராட்டு


இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் - அமெரிக்கா பாராட்டு
x
தினத்தந்தி 15 Jun 2024 3:30 AM IST (Updated: 15 Jun 2024 3:31 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டன்,

இந்திய நாடாளுமன்ற தேர்தல், வரலாற்றில் எந்த நாட்டிலும் நடந்ததை விட மிகப்பெரிய தேர்தல் என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்திய நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம். வரலாற்றில் எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் நடந்ததை விட இதுதான் மிகப்பெரிய தேர்தல்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆளும் பா.ஜனதா சார்பில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இடம்பெறவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மாத்யு மில்லர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

''இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன். அது வாக்காளர் பிரச்சினை. அதுபற்றி இந்திய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று அவர் கூறினார்.


Next Story