அமெரிக்காவில் இந்து கோவிலில் உண்டியல் கொள்ளை: திருடப்பட்ட நன்கொடைகள்


அமெரிக்காவில் இந்து கோவிலில் உண்டியல் கொள்ளை: திருடப்பட்ட நன்கொடைகள்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Nov 2023 12:45 AM IST (Updated: 1 Nov 2023 1:05 PM IST)
t-max-icont-min-icon

மர்மநபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடி கொண்டு செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

நியூயார்க்,

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள இந்து கோயிவில் ஆறு பேர் கொண்ட கும்பல், உண்டியலை திருடிச்சென்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணம் சேக்ரமென்டோ நகரில் விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. அதிகாலையில் 2 மணியளவில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது. இதுகுறித்த எச்சரிக்கை கோவில் நிர்வாகிகளின் செல்போன்களுக்கு வந்தது. இதனையடுத்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கோவிலில் இருந்த உண்டியல் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்தபோது மர்மநபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் திருடர்களை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக காவல் துறையினர் இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Next Story