கனடாவில் பயங்கர காட்டுத் தீ; ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்


கனடாவில் பயங்கர காட்டுத் தீ; ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்
x

Image Courtesy : AFP

கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது.

ஒட்டாவா,

கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1,458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் தீயின் சீற்றத்தால் பனி உருகுவதால் பிரிட்டிஷ் கொலம்பியா உட்புற பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

வெப்பம் காரணமாக பனி உருகுவது அதிகமாகியுள்ளது. இது ஆறுகள், சிற்றோடைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியது என்று அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது. காட்டுத்தீ மற்றும் வெப்பம் காரணமாக 13 ஆயிரம் பேர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story