வங்காளதேசத்தில் வெள்ள பாதிப்பு; 59 பேர் பலி


வங்காளதேசத்தில் வெள்ள பாதிப்பு; 59 பேர் பலி
x

வங்காளதேசத்தில் வெள்ள பாதிப்புக்கு அதிக அளவாக பெனி மாவட்டத்தில் 23 பேரும், கமில்லா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் 2 வாரங்களாக பெய்து வரும் பருவமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. மின் விநியோகம் பாதிப்பு, சாலை இணைப்பு துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில், சிக்கி 59 பேர் வரை பலியாகி உள்ளார்கள். இதில் அதிக அளவாக பெனி மாவட்டத்தில் 23 பேரும், கமில்லா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்து உள்ளனர். 11 மாவட்டங்களில் உள்ள நகராட்சி பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் 54 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

40 லட்சம் பேர் வரை 3,900-க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், போதிய தூய்மையான குடிநீர் கிடைக்காத சூழலில், தொற்று நோய் பரவ கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.


Next Story