ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உக்ரைன் பயணம்: அதிபர் ஜெலென்ஸ்கியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!


ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கீவ்,

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து உக்ரைனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க, உக்ரைனுக்கு சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ரஷியாவின் போர் தொடங்கியதிலிருந்து எனது மூன்றாவது முறையாக கீவ் நகருக்கு வருகை தந்துள்ளேன். உக்ரைன் போரில் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், நமது பொருளாதாரங்களையும் மக்களையும் எவ்வாறு நெருக்கமாக்குவது என்பதை ஜெலென்ஸ்கி மற்றும் (பிரதமர்) டெனிஸ் ஷ்மிகல் ஆகியோருடன் நான் விவாதிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

உலகத் தலைவர்களிடம் செப்டம்பர் 21ம் தேதி அன்று நடைபெறும் உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விண்ணப்பித்துள்ளது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story