துபாயில் அமையப்போகும் ராட்சச நிலா வடிவில் பிரம்மாண்ட சொகுசு விடுதி
துபாயில் நிலவை போன்ற தோற்றத்துடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு விடுதி விரைவில் வரவுள்ளது.
துபாய்
சுற்றுலா பயணிகளை கவர துபாய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துபாய் தற்போது நிலவின் வடிவத்தில் ஒரு ரிசார்ட் கட்ட தயாராகி வருகிறது. தற்போது உயரமான கட்டிடங்கள் கட்டுவதில் துபாய் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் தான் துபாயில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனடாவை சேர்ந்த மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் துபாயில் நிலவின் வடிவில் ரிசார்ட் அமைக்க திட்டமிட்டுள்ளது.
துபாயில் நிலவை போன்ற மிகவும் பெரிய சொகுசு விடுதி ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டின் 'மூன் வேர்ல்டு ரிசார்ட்ஸ்' (Moon World Resort Inc.,) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உண்மையிலேயே நிலவை தரையில் இறக்கினால் எப்படி இருக்குமோ, அதே போலவே இந்த சொகுசு விடுதி கட்டப்பட உள்ளது. இதன் மொத்த உயரம் 735 அடி (224 மீட்டர்)என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( 39 ஆயிரத்து 838 கோடி ரூபாய்) செலவாகும் என்று முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது. இந்த விடுதியில் ஆடம்பரக் குடியிருப்புகளும், ஸ்பா, இரவு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்குஉள்ளன.
10 ஏக்கரில் அமையவுள்ள இந்த விடுதியில் வெல்னஸ் சென்டர், நைட் கிளப், 300 ஸ்கை வில்லா குடியிருப்புகள், ஓட்டல் அறைகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், வணிக வளாகங்கள், 5டி திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளன. இந்த விடுதியை சுற்றிலும் நிலவின் மேற்புறத்தை போலவே காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
தற்போது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், இந்த நிலவு சொகுசு விடுதி துபாயில் எந்தப் பகுதியில் அமையப் போகிறது என்பது தான் தெரியவில்லை. இதற்கான அனுமதி கிடைத்தவுடன், 48 மாதங்களில் இதன் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலவு சொகுசு விடுதி கட்டி முடிக்கப்பட்டால், ஆண்டுதோறும் 1 கோடி பேர் வரை இங்கு வந்து செல்வார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.8 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் எனக் கூறப்படுகிறது.
மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸின் நிறுவனர்கள், சாண்ட்ரா ஜி. மேத்யூஸ் மற்றும் மைக்கேல் ஆர். ஹென்டர்சன், மூன் துபாய் முழு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான நவீனகால சுற்றுலா திட்டமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்,