சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி
சிரியாவில் பயங்கரவாதிகள் ராணுவ முகாமை குறிவைத்து நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
டமாஸ்கஸ்,
சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே இவர்களை ஒடுக்குவதற்காக சிரிய ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டெய்ர் அல்-சூர் மாகாணத்தில் சிரிய ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் ராணுவ முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Related Tags :
Next Story