ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நிராகரித்த கிறிஸ் ராக் ?


ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நிராகரித்த கிறிஸ் ராக் ?
x

Image Courtesy : AFP 

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம், நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் உலக அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story