தைவானை சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சி ஒத்திகை: சீனா தகவல்


தைவானை சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சி ஒத்திகை: சீனா தகவல்
x

தைவானைச் சுற்றி நேற்று போர் ஒத்திகையை மேற்கொண்டதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நடந்த சண்டையைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் தனி நாடாக இறையாண்மையுடன் விளங்கி வருகிறது. ஆனால் சீனா, தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கிறது.

இதற்கு அமெரிக்கா, சீனப்பெருஞ்சுவர்போல பெரும் தடையாக நிற்கிறது. தைவானை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும், அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் கொக்கரித்து வருகிறார். அதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயார் என்னும் ரீதியில் ஏற்கனவே அவர் பேசி உள்ளார்.

மேலும், அவ்வபோது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைத்தது. இந்த நிலையில், தைவானைச் சுற்றி நேற்று போர் ஒத்திகையை மேற்கொண்டதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இது ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட்ட இரண்டாவது பயிற்சியாகும். இதனால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story