இங்கிலாந்து மன்னராக நாளை முடி சூட்டிக்கொள்ளும் சார்லஸ் - களைகட்டிய பக்கிங்காம் அரண்மனை


இங்கிலாந்து மன்னராக நாளை முடி சூட்டிக்கொள்ளும் சார்லஸ் - களைகட்டிய பக்கிங்காம் அரண்மனை
x

இங்கிலாந்து மன்னராக சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் லண்டனில் முகாமிட்டுள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூடும் விழாவிற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவைக் காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வரும் நிலையில், சார்லஸை அழைத்துச் செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட் வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

முடி சூடும் நிகழ்வு நிறைவடைந்ததும் சாரட் வண்டியில் சார்லசும், அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனை தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர். இந்நிகழ்வை நேரடியாக கண்டு ரசிக்க லட்சக்கணக்கானோர் பக்கிங்காம் அரண்மனை முன்பு கூடுவார்கள்.

இந்த விழாவிற்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகியுள்ளது. புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லஸின் தலையில் அணிவிக்கப்பட்ட உடன், அவரது மனைவி கமிலா இங்கிலாந்து ராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story