பிரேசில்: சுற்றுலா மினி பஸ்-லாரி மோதலில் 25 பேர் பலி


பிரேசில்:  சுற்றுலா மினி பஸ்-லாரி மோதலில் 25 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2024 8:53 AM IST (Updated: 9 Jan 2024 10:25 AM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் மினி பஸ்சில் இருந்தவர்கள் என போலீசார் கூறினர்.

பஹியா,

பிரேசில் நாட்டின் வடகிழக்கே அமைந்த பஹியா மாகாணத்தில் நோவா பாத்திமா மற்றும் கவியாவோ நகரங்களுக்கு இடையே மத்திய சாலையில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு மினி பஸ் ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அதில், 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இந்நிலையில், திடீரென லாரி ஒன்றுடன் மோதி அந்த மினி பஸ் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் மினி பஸ்சில் இருந்தவர்கள் என போலீசார் கூறினர். விபத்துக்கான காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story