ரஷியாவில் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு - டிரோன் தாக்குதல் என தகவல்

Image Courtesy : AFP
கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாஸ்கோ,
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷியாவின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கவர்னர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story