பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்; முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் பலி


பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்; முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் பலி
x

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் செனட் உறுப்பினர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரி அலி அமின் உத்தரவிட்டு உள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவர் ப்குதியில் தமடோலா என்ற இடத்தில் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.

முன்னாள் செனட் உறுப்பினரான இதயத்துல்லா கான், தமடோலா பகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றபோது, அவருடைய காரை இலக்காக கொண்டு நடந்த இந்த தாக்குதலில், அவர் உயிரிழந்து உள்ளார். அவருடன் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால், மொத்தம் 5 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

எனினும், இந்த தாக்குதலுக்கு ஒருவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. இதுபற்றி அனைத்து வகையிலும் விசாரணை நடத்தி அதுபற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரி அலி அமின் கந்தப்பூர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த தாக்குதல் ரிமோட் கண்ட்ரோல் முறையில் நடத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ள அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி சம்பவத்திற்கு கண்டனமும், இரங்கலும் தெரிவித்து உள்ளார்.


Next Story