டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.2 ஆக பதிவு


டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.2 ஆக பதிவு
x

டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் டோங்காவிற்கு தென்மேற்கே 280 கிமீ (174 மைல்) தொலைவில் 167.4 கிமீ (104 மைல்) ஆழத்தில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக பிஜி தீவுகளின் தெற்குப் பகுதிக்கு அருகே 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story