இங்கிலாந்து பிரதமரின் விமான பயணங்களுக்கு 6 வாரங்களில் ரூ.4.46 கோடி செலவு


இங்கிலாந்து பிரதமரின் விமான பயணங்களுக்கு 6 வாரங்களில் ரூ.4.46 கோடி செலவு
x

இங்கிலாந்து பிரதமர் வெளிநாடு செல்வதற்காக அவரது விமான பயணங்களுக்கு ரூ.4.46 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 5,00,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்து, பாலி, லாட்வியா, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக ரிஷி சுனக் சென்றிருந்தார். இதில் பாலி பயணத்தின் போது தன்னுடன் 35 அதிகாரிகளை அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 1,08,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 3,40,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் விமான பயணங்களுக்காக கடந்த 6 வாரங்களில் இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக விரயம் செய்வதாக ரிஷி சுனக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.




Next Story