ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஒவாகடுகோ,
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே ராணுவத்தினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புர்கினோ பாசோவின் மவுகான் மாகாணம் யூலு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்தவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 33 பேர் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story