கென்யாவில் கோர விபத்து: ஆற்றில் பஸ் கவிழ்ந்து 30 பேர் பலி

கோப்புப்படம்
கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
நைரோபி,
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்று முன்தினம் மாலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் மெரு-நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆற்றுபாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
Related Tags :
Next Story






