நேபாள நாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் தவித்த 3 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்பு


நேபாள நாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் தவித்த 3 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்பு
x

வனப்பகுதிக்குள் அட்டை பூச்சிகள் கடித்ததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

காத்மாண்டு,

இந்தியாவை சேர்ந்தவர்கள் நிதின் திவாரி, ரஷ்மி திவாரி, தினேஷ் திவாரி இவர்கள் 3 பேரும் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாகர்கோட் என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு 3 பேரும் நேற்று முன் தினம் சென்றனர். நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான ஹரி பிரசாத் சுரேல் என்பவருடன் 3 பேரும் வனப்பகுதிக்குள் நுழைந்தனர்.

முகாம் போகாரி ராணி என்ற இடத்தில் சென்ற போது 4 பேரும் காட்டுக்குள் வழி தெரியாமல் சென்று விட்டனர். இதனால் அவர்கள் காட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் தவித்தனர். மேலும் அவர்களை வனப்பகுதிக்குள் அட்டை பூச்சிகள் கடித்ததால் கடும் அவதிப்பட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று காட்டுக்குள் அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். உள்ளூர் கிராம மக்களும் அவர்களுக்கு உதவினார்கள். சுமார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு நள்ளிரவில் 4 பேரும் ஹல்ஹலே கவுடா பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் 4 பேரும் காத்மாண்டு அழைத்து வரப்பட்டனர்.


Next Story