உக்ரைன் தாக்குதல்: ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் சரமாரி குண்டு வீச்சு - 25 பேர் பலி
இரு நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
கீவ்,
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனிடையே மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரண்டும் கடந்த இரண்டு மாதங்களில் பொதுமக்கள் பகுதிகள் மீதான தாக்குதல்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் நகரில் உள்ள ஒரு சந்தை மீது நேற்று சரமாரியாக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. எனினும் உக்ரைன் ராணுவம் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
Related Tags :
Next Story