கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x

கந்தம்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

கந்தம்பாளையம்

தொழிலாளி

கந்தம்பாளையம் அருகே உள்ள வைரம்பாளையத்தை சேர்ந்தவர் விவேக் (வயது 33). விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்த மண்ணை வெளியே எடுக்க முடிவு செய்தார். இதற்கு பனங்காட்டை சேர்ந்த தொழிலாளி கார்த்திக் (32), ரத்தினம், கேசவன், லட்சுமி, நவீன்குமார், மாயக்கண்ணன், விக்னேஷ் ஆகியோர் கிரேன் மூலம் ரோப் கட்டி கிணற்றில் இருந்து மண்ணை எடுத்தனர்.

அப்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் கிணற்றுக்குள் இருந்தவர்கள் மேலே வர முடியாமல் கடும் சிரமப்பட்டனர். இந்தநிலையில் ஒரு டிராக்டரில் ரோப்பை கட்டி பறியல் மூலம் கார்த்திக், விக்னேசும் கிணற்றிலிருந்து மேலே வந்தனர். அப்போது கார்த்திக் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சாவு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறைநிலைய வீரர்கள் கிணற்றில் இருந்தவர்களை மீட்டனர். மேலும் காயம் அடைந்த கார்த்திக் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story