லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு - ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்


லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு - ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்
x

மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன.

சென்னை

வேலூர் மாவட்டம், முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் லாரி பழுது பார்க்கும் குடோனில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர் கடந்த 4-ந்தேதி லாரி மீது ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, திடீரென தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, பிரபாகரனின் உறவினர்கள் சம்மதத்துடன், இரண்டு கண்கள், தோல் மற்றும் இரு சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெற்றப்பட்டன. அவரிடமிருந்து தானமாக பெறப்பட்ட ஒரு சிறுநீரகம் தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான்லி ஆஸ்பத்திரி நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கு அரசு வழிமுறைப்படி வழங்கப்பட்டது. தோல் மற்றும் கண்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.


Next Story