கரூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த விரைவில் பணிகள் தொடங்கும்: சேலம் ரெயில்வே கோட்ட பொது மேலாளர் பேட்டி


கரூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த விரைவில் பணிகள் தொடங்கும்:  சேலம் ரெயில்வே கோட்ட பொது மேலாளர்  பேட்டி
x

கரூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த விரைவில் பணிகள் தொடங்கும் என சேலம் ரெயில்வே கோட்ட பொது மேலாளர் கூறினார்.

கரூர்

ரெயில் நிலையம் ஆய்வு

சேலம் ெரயில்வே கோட்ட பொது மேலாளராக பங்கஜ்குமார் சின்ஹா கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் சிறப்பு ரெயில் மூலம் அதிகாரிகளுடன் கரூர் ெரயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள ெரயில் நிலைய நடை மேடை, இரு சக்கர வாகன நிறுத்தும் இடம், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட இடங்களை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

பேட்டி

அதனை தொடர்ந்து சேலம் ெரயில்வே கோட்ட பொது மேலாளராக பங்கஜ்குமார் சின்ஹா நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 1000 ெரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கரூர் ெரயில் நிலையமும் ஒன்று. இதனால் மேற்படி ெரயில் நிலையத்தை மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கரூர் ெரயில் நிலைய மேலாளர் ராஜராஜன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்


Next Story