ஜல்லிக்கட்டு போட்டி வரலாற்றில் முதன் முறையாக பெண் வர்ணனையாளர்கள்.!
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண் வர்ணனையாளர்கள் இடம்பெற்று அற்புதமாக வர்ணனை செய்து வருகின்றனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை துணிச்சலுடன் மாடிபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். போட்டியில் வெற்றிபெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண் வர்ணனையாளர்கள் இடம்பெற்று அற்புதமாக வர்ணனை செய்து வருகின்றனர். ஆண்களுக்கு இணையாக ஜல்லிக்கட்டு போட்டியில் அண்ணா பாரதி மற்றும் மண்வாசம் லாவண்யா வர்ணனையில் சக்கை போடு போட்டு வருகின்றனர்.
"காளை வருது துள்ளிக்கிட்டு... நிக்காம நீ கைய்யதட்டு... நம்ம பெரும ஜல்லிக்கட்டு" என தங்கள் பாணியில் அவர்கள் வர்ணனை செய்துவருகின்றனர்.
Related Tags :
Next Story