கரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை
கரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2-வது நாளாக மழை
கரூர், தாந்ேதாணிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2-வது நாளாக சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. இதனால் வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் நனைந்தவாறும், குடைபிடித்தபடியும் சென்றனர்.
நொய்யல்
ெநாய்யல், நடையனூர், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், நொய்யல், குறுக்குச்சாலை, குந்தாணி பாளையம், நத்தமேடு, புன்னம் சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், மரவாபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதியில் நேற்று 2-வது நாளாக மதியம் 2.30 மணியில் இருந்து சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோர கடைக்காரர்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.
அதேபோல் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளர்களும் மழையில் நனைந்து கொண்டு சென்றனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்ததது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை அளவு
கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-கரூர்-4, க.பரமத்தி-6, தோகைமலை-12, கிருஷ்ணராயபுரம்-3, மாயனூர்-3, பஞ்சபட்டி-2.8, கடவூர்-15.2, பாலவிடுதி-21.4, மைலம்பட்டி-19.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.