"இனியும் இப்படி வாழ முடியாது" - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு


இனியும் இப்படி வாழ முடியாது - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு
x

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும் என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார்.

இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே ஜூலை மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றி பேசியதாவது:-

இலங்கைக்கு நிலையான பொருளாதாரம் அவசியமாகும் என்றார். இனி கடன் உதவியை நம்பியிருக்கும் தேசமாக இருக்க முடியாது. பொருளாதாரம் பலமில்லாத சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் துறைகளில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக குறைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story